அமெரிக்காவிற்கான iPhone உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றும் Apple

27 சித்திரை 2025 ஞாயிறு 14:47 | பார்வைகள் : 153
அமெரிக்க விற்பனைக்கான iPhone உற்பத்தியை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்ற Apple திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வரி போர் காரணமாக, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Apple, 2026 இறுதிக்குள் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான iPhone-களை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் விற்கப்படும் 60 மில்லியன் iPhone-களில் 80 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்படுகிறது.
இது சீனா மீது அதிகரித்து வரும் கட்டணங்களுக்கு மத்தியில் எதிர்கொள்ளும் சில செலவுகளைத் தணிக்க உதவும் ஒரு முக்கிய படியாகும்.
Foxconn மற்றும் Tata Group உடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தி விரிவாக்கம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே, மார்ச் மாதத்தில் மட்டும் 2 பில்லியன் டொலர் மதிப்பிலான iPhone-களை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவை உலக ஸ்மார்ட்போன் உற்பத்தி மையமாக மாற்றுவதை ஊக்குவித்து வருகிறார்.
கூடுதல் ஆதரவாக, சில மொபைல் phone உற்பத்தி உபகரணங்களுக்கு இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் உற்பத்தி செலவு சீனாவை விட 5-8 சதவீதம் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், முழுமையான மாற்றத்திற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.