Paristamil Navigation Paristamil advert login

டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!

டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!

28 சித்திரை 2025 திங்கள் 08:57 | பார்வைகள் : 204


டில்லியில் வசிக்கும் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை உளவுத்துறை டில்லி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து,

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தூதரக பாதுகாப்பு வாபஸ், சிந்து நதிநீர் நிறுத்தம் என அடுக்கடுக்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை நாடு திரும்பவும், இங்குள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டது. பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி உள்ளது.

இந்நிலையில், டில்லியில் வசிக்கும் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை உளவுத்துறை டில்லி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. அவர்களை இந்தியாவில் இருந்து நாடு கடத்தும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களை இந்தியா விட்டு நாடு கடத்த மத்திய அரசு விதித்த கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்