Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்கிறோம்; இந்தியாவுக்கு ஈரான் அதிபர் உறுதி

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்கிறோம்; இந்தியாவுக்கு ஈரான் அதிபர் உறுதி

27 சித்திரை 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 137


பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் நாங்களும் துணை நிற்கிறோம் என பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய ஈரான் அதிபர்மசூத் பெஷேஷ்கியன் உறுதி அளித்துள்ளார்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து ஈரான் அதிபர், பிரதமர் மோடி இடம் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களுக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது.

மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்தும், இந்திய மக்களின் கோபத்தையும், வேதனையையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.

ஈரான் துறைமுகத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்