கர்ப்ப காலத்தில் Aspirine, ibuprofène மருந்துகள் ஆபத்தானவை: மருந்து பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை!!

27 சித்திரை 2025 ஞாயிறு 02:15 | பார்வைகள் : 811
Aspirine மற்றும் ibuprofène போன்ற மருந்துகள் கர்ப்ப காலத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்று மருந்து பாதுகாப்பு அமைப்பு (ANSM) வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 25 அன்று கவலை தெரிவித்துள்ளது.
இந்த மருந்துகள் கருக்கலைதல், பிறவிக் குறைபாடுகள், பிரசவ சிக்கல்கள் போன்ற தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை.
குறிப்பாக, ஆறாம் மாதம் கடந்த பின்பு இந்த மருந்துகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு முறை எடுத்தால் கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆறாம் மாதத்திற்கு முன்பு, மருந்து சீட்டின் உதவியுடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
2018 முதல் 2023 வரை சுமார் 7 லட்சம் கர்ப்பிணி பெண்கள் இந்த மருந்துகளை பயன்படுத்தியதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதில் 26,000 பேர் ஆறாம் மாதத்தை கடந்தவர்கள். மருந்து சீட்டு இல்லாமல் வாங்கிய மருந்துகள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.