பட்ஜெட் 2025: கடன்கள் ரத்து! சுற்றுச்சூழல் முதல் விவசாயம் வரை முக்கிய துறைகள் பாதிப்பு!

27 சித்திரை 2025 ஞாயிறு 01:05 | பார்வைகள் : 780
2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 3.1 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொதுகடன்களை ரத்து செய்யும் தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது.
இந்நிதிச் சேமிப்புகள், இவ்வருடத்துக்கான அரசின் நிதி நெருக்கடியை பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு, குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கத்தின் ஒரு பகுதியாகும் என பொது நிதிஅமைச்சர் அமெலி து மொன்சலின் (Amélie de Montchalin) தெரிவித்துள்ளார்.
மேலும் வளர்ச்சி வேகத்தின் வீழ்ச்சி மற்றும் நிலைத்தன்மையற்ற உலக அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த நிதி கட்டுப்பாடுகள் அவசியமானவை என கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட துறைகள்:
- சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை – 549.6 மில்லியன் யூரோக்கள்
- பொருளாதார துறை – 517.7 மில்லியன் யூரோக்கள்
- ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி துறை – 493.3 மில்லியன் யூரோக்கள்
- விவசாயம், உணவுத்துறை மற்றும் கிராமிய விடயங்ள் – 140 மில்லியன் யூரோக்கள்
ஆகியவை அடங்கும். அரசின் மதிப்பீடுகளின்படி, இந்த நிதி குறைப்புகள், பொது சேவைகளின் செயல்திறனை பெரிதாக பாதிக்காது என்பதாகும்.