Paristamil Navigation Paristamil advert login

சுவிட்சர்லாந்தில் ஏலத்திற்கு வரும் கோல்கொண்டா நீல வைரம்., மதிப்பு ரூ.430 கோடி!

சுவிட்சர்லாந்தில் ஏலத்திற்கு வரும் கோல்கொண்டா நீல வைரம்., மதிப்பு ரூ.430 கோடி!

26 சித்திரை 2025 சனி 15:06 | பார்வைகள் : 173


ரூ.430 கோடி மதிப்புள்ள கோல்கொண்டா நீல வைரம் சுவிட்சர்லாந்தில் ஏலத்திற்கு வருகிறது.

ஹைதராபாத் இருந்து கிடைத்துள்ள அபூர்வமான 23-கேரட் கோல்கொண்டா நீல வைரம், சுவிட்சர்லாந்தில் ஏலத்திற்கு வருகிறது.

மே 14-ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறும் ஏலத்தில், இந்த வைரம் ரூ.300 முதல் ரூ.430 கோடி வரை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல பாரிஸ் நகை வடிவமைப்பாளர் JAR வடிவமைத்த மோதிரத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த வைரம், ஒரு காலத்தில் இந்தூர் மற்றும் பாரோடா அரச குடும்பங்களின் சொத்தாக இருந்தது.

“அரச குடும்ப வரலாறு, அபூர்வ நிறம் மற்றும் பெரிய அளவு ஆகியவற்றால், ‘கோல்கொண்டா நீல வைரம்’ உலகிலேயே மிகவும் அரிய நீல வைரங்களில் ஒன்றாகும்” என்று கிரிஸ்டீஸ் நகை பிரிவின் உலகத் தலைவர் ராகுல் கடாக்கியா கூறியுள்ளார்.

இந்த வைரத்தின் வைரத்தின் வரலாறு 4-ஆம் நூற்றாண்டின் சமஸ்கிருத கையெழுத்துப் பிரதிக்கு முந்தையது. 327 கிபி-ல் மாவீரர் அலெக்ஸாண்டர் இந்திய வைரங்களை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றார். இந்த அரிய ரத்தினங்கள் மீது மேற்கத்திய மக்களுக்கு மோகத்தைத் தூண்டினார்.

பின்னர் 1292-ஆம் ஆண்டு மார்கோ போலோ இந்திய வைரங்களின் அழகை தனது பயணக் குறிப்புகளில் பதிவு செய்தார்.

இந்த வைரம், தெலங்கானா மாநிலத்தின் புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கங்களில் இருந்து பெற்றவை. இங்கு பிரபலமான கோஹினூர் மற்றும் ஹோப் வைரங்களும் தோன்றியுள்ளன.

மிகவும் பிரபலமான இந்த வைரம், 20-ஆம் நூற்றாண்டின் முன்னேறிய அரசராக போற்றப்பட்ட இந்தூர் மகாராஜா இரண்டாம் யெஷ்வந்த் ராவ் ஹோல்கரின் சேகரிப்பில் இருந்தது.

1923-ஆம் ஆண்டு பிரெஞ்சு நகை வடிவமைப்பாளர் சோமே இந்த வைரத்தை ஒரு மோதிரமாக வடிவமைத்தார்.

இந்த வைரம், இந்திய வரலாற்று சின்னமாகவும், உலகப்புகழ் பெற்ற வைரமாகவும் திகழ்கிறது.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்