ஈராக்கில் கைதிகளாக உள்ள பிரெஞ்சு ஜிஹாதிகளை நாடு திரும்ப ஏற்பாடு: நீதித்துறை அமைச்சர் Gérald Darmanin !!
                    26 சித்திரை 2025 சனி 16:27 | பார்வைகள் : 9582
ஈராக்கில் கைதியாக உள்ள மூன்று பிரெஞ்சு ஜிஹாதிகளை நாடு திரும்ப அழைத்து வர அரசு முடிவெடுத்துள்ளதாக நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் ஏப்ரல் 25 அன்று தெரிவித்துள்ளார்.
இவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பின்னர், வாழ்நாள் சிறைத்தண்டனைக்குத் தள்ளப்பட்டவர்கள் மேலும் நாட்டின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தண்டனையை பிரான்ஸிலேயே நிறைவேற்றுவது நியாயமானது எனவும், இதுபோன்ற நிலைக்கு பிற நாடு குடிமக்களை அனுப்பும்போது, நாமும் நம்முடையவர்களை மீண்டும் ஏற்க வேண்டும் எனவும் தர்மனின் கூறினார்.
இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் வழக்கறிஞர்கள், இது மருத்துவ காரணங்கள் மற்றும் மனிதாபிமானம் சர்ந்த முக்கியமான முடிவு என தெரிவிக்கின்றனர். மேலும் குடும்பத்தினரை சந்திக்கவும், பிரெஞ்சு நீதிபதிகள் நேரடியாக விசாரணையை நடத்தவும் முடியும் எனவும் கூறுகின்றனர்.
ஜிஹாதிகள் (des jihadistes) எனப்படுபவர்கள் பயங்கரவாதத்தை தூண்டும் தீவிரவாத அடிப்படைவாதிகளின் கருத்துக்கள் மற்றும் செயல்களை ஆதரிப்பவர்கள்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

        
        
        
        
        
        
        
        
        
        
















Coupons
Annuaire
Scan