அடுத்தடுத்து மூன்று துப்பாக்கிச்சூடுகள்.. பலர் காயம்!!

26 சித்திரை 2025 சனி 09:41 | பார்வைகள் : 588
பிரான்சின் தெற்கு பகுதியான Grenoble (Isère) நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்து மூன்று துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றன.
ஏப்ரல் 25, நேற்று வெள்ளிக்கிழமை இரவு அங்கு அடுத்தடுத்து மூன்று துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றதாகவும், அதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் Grenoble நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலாவது துப்பாக்கிச்சூடு Saint-Martin-d'Hères நகரில் இரவு 10.20 மணிக்கு இடம்பெற்றதாகவும், அதில் 22 மற்றும் 34 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட அதே நேரத்தில் Fontaine நகர்ப்பகுதியில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதில் வயது குறிப்பிடப்படாத இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக தெற்கு புறநகரில் Place des Géants பகுதியில் நள்ளிரவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 வயது இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த மூன்று துப்பாக்கிச்சூடுகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.