Paristamil Navigation Paristamil advert login

20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள்! யூடியூபின் சாதனைப் பயணம்

20 ஆண்டுகளில் 20 பில்லியன் வீடியோக்கள்! யூடியூபின் சாதனைப் பயணம்

26 சித்திரை 2025 சனி 07:44 | பார்வைகள் : 142


உலகில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் சமூக ஊடக தளம் எதுவென்று கேட்டால், சட்டென நினைவுக்கு வருவது யூடியூப் தான்.

பொழுதுபோக்கு முதல் கல்வி வரை, அனைத்து விதமான வீடியோக்களை பார்க்கவும், பதிவேற்றம் செய்யவும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த இணையத்தளத்தை நாடி வருகின்றனர்.

2005 ஆம் ஆண்டு, ஸ்டீவ் சென், சந்த் ஹர்லி மற்றும் ஜாவித் கரீம் ஆகிய தொலைநோக்கு சிந்தனையாளர்களால் யூடியூப் உருவாக்கப்பட்டது.

அந்த ஆண்டின் ஏப்ரல் 23 ஆம் திகதி, யூடியூப் தளத்தில் முதல் வீடியோ பதிவேற்றப்பட்டது.

ஆரம்பத்தில் ஒரு எளிய வீடியோ பகிர்வு தளமாக தொடங்கப்பட்ட இது, இன்று உலகளாவிய சமூக வலைத்தளமாகவும், வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையாகவும் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது.

யூடியூப் தனது 20வது ஆண்டு நிறைவை கொண்டாடி வரும் இந்த தருணத்தில், ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது.

இதுவரை இந்தத் தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை 20 பில்லியனை தாண்டியுள்ளது.

இது யூடியூபின் அபரிமிதமான வளர்ச்சியையும், உலக மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் பேராதரவையும் தெளிவாக உணர்த்துகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்