அன்டார்டிகாவில் பாரிய பனித்துளை -விஞ்ஞானிகள் அதிர்ச்சி

26 சித்திரை 2025 சனி 06:36 | பார்வைகள் : 268
அன்டார்டிகாவின் தெற்குப் பெருங்கடலில் உள்ள மாட் ரைஸ் பகுதியில், பாரிய பனித்துளை (Polynya) உருவாகியுள்ளது.
கடலுக்கு மேல் உறைந்த பனி சிதறி, கீழே கடல் நீர் வெளிப்படுவதால் உருவாகும் இந்த வகையான பனித்துளைகள் அசாதாரணமானவை அல்ல.
ஆனால் பனித்துளையின் அளவும், நீடித்த காலமும் விஞ்ஞானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாட் ரைஸ் கீழிருக்கும் கடலடி மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வெடல் ஜைர் (Weddell Gyre) என்ற கடல் ஓட்டம், சூடான நீரை மேல் கொண்டு வருவதால் பனி அடியில் இருந்து உருகுகிறது.
2017-ல் இதே இடத்தில் இதுபோன்ற பனித்துளை ஒன்று உருவானதையும், இப்போது மீண்டும் நிகழ்ந்திருப்பதையும் வைத்து, மாட் ரைஸ் ஒரு "பனித்துளை ஹாட்ஸ்பாட்" எனக் கருதப்படுகிறது.