Paristamil Navigation Paristamil advert login

ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது: தொலைநோக்கு திட்டம் தீட்டுகிறது மத்திய அரசு

ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது: தொலைநோக்கு திட்டம் தீட்டுகிறது மத்திய அரசு

26 சித்திரை 2025 சனி 06:16 | பார்வைகள் : 169


சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் சிஆர் பாட்டீல் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்து உள்ளது. இந்த ஒப்பந்தம் போட்ட பிறகு முதல் முறையாக ரத்து செய்யப்படுகிறது.

ஒப்பந்தம் ரத்து தொடர்பாக முறையான அறிவிப்பை பாகிஸ்தானிடம் தெரிவித்து உள்ளது. மத்திய ஜல்சக்தித் துறை செயலர் தேவ்ஸ்ரீ முகர்ஜி இது தொடர்பான கடிதத்தை பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசாவிற்கு அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஜல்சக்தித்துறை அமைச்சர் சிஆர் பாட்டீல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு சிஆர் பாட்டீல் கூறியதாவது: மத்திய அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின் போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் 3 வகையான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் குறுகிய கால, நடுத்தரம் மற்றும் நீண்ட கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நதி தூர் தூரவாரப்பட்டு நீர் திருப்பி விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்