Paristamil Navigation Paristamil advert login

கியூபெக்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டண அதிகரிப்பிற்கு நீதிமன்றம் தடை

கியூபெக்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டண அதிகரிப்பிற்கு நீதிமன்றம் தடை

25 சித்திரை 2025 வெள்ளி 10:05 | பார்வைகள் : 2362


கியூபெக் மாகாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டண அதிகரிப்பு தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கியூபெக் மாகாணத்திற்கு வெளியேயுள்ள மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட 3,000 டொலர் கட்டண உயர்வு அரசின் தரவுகளுக்கு ஆதாரம் இல்லாமல் எடுத்த முடிவாகும் என்று கியூபெக் மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் மொன்ட்ரியாலில் உள்ள ஆங்கிலக் கல்வி நிறுவனங்கள் McGill மற்றும் Concordia பல்கலைக்கழகங்களுக்கு ஒரு பகுதிநிலை வெற்றியாக அமைந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு, மாகாணத்திற்கு வெளியிருந்து வருகின்ற மாணவர்களுக்கு இவ்வாறு கட்டண அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது.

பிரெஞ்சு மொழியை பாதுகாப்பதற்காக கட்டணத்தை 33% உயர்த்த வேண்டும் என்பதையும் மாநில உயர் கல்வி அமைச்சர் பாஸ்கல் டெரி தெரிவித்திருந்தார்.

அரசின் முடிவுகள் நியாயமான தரவுகளால் ஆதரிக்கப்படவில்லை” என்றும், “பிரெஞ்சு மொழிக்கு பாதுகாப்பு தேவை என்பது உண்மை என்றாலும், தவறான அல்லது இல்லாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் எடுக்க முடியாது” என நீதிபதி எரிக் டூஃபூர் தெரிவித்துள்ளார்.

அரசின் கட்டண உயர்வை நீதிபதி தற்போது இரத்து செய்தாலும், அது இன்னும் 9 மாதங்கள் வரை அமலிலிருக்கும் வகையில் இடைக்கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்குள் அரசு புதிய கட்டணத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆங்கிலக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாநிலத்திற்கு வெளியேயுள்ள பட்டப்படிப்பு மாணவர்கள் பட்டம் பெறும் போது, பிரெஞ்சு மொழியில் குறைந்தது நடுத்தரத் திறனடைய வேண்டும் என்ற புதிய விதியும் இந்த தீர்ப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டுள்ளது.  

 

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்