Apple Watch-க்கு வயது 10! தொடர்ந்து ஸ்மார்ட் ஃபிட்னஸ் டிராக்கரில் முதன்மை

25 சித்திரை 2025 வெள்ளி 09:59 | பார்வைகள் : 154
2015 ஏப்ரல் 24-இல் அறிமுகமான ஆப்பிள் வாட்ச் இப்போது 10 ஆண்டுகளைக் கடந்துள்ளது.
ஸ்மார்ட் வாட்சாக Apple Watch முதன்மையான வாட்சாக இல்லாவிட்டாலும், இது ஃபிட்னஸ் டிராக்கர்களுக்கான புதிய தரத்தை நிர்ணயித்துள்ளது.
ஆப்பிள் வாட்சில் உருவாக்கப்பட்ட மூன்று வளையங்கள் - Move, Exercise மற்றும் Stand இன்று உலகம் முழுவதும் மக்களுக்கு பயன்படும் முக்கிய ஃபிட்னஸ் வழிகாட்டியாக மாறியுள்ளன.
ஆப்பிளின் ஃபிட்னஸ் தொழில்நுட்ப துணைத் தலைவர் ஜே பிளாஹ்னிக் கூறுகையில், "இது எங்கள் பயனர்களின் உடல் நலத்தையும், ஒழுங்கான வாழ்க்கை முறையையும் முன்னிலைப்படுத்துகிறது. ஒரு சாதாரண பயனர் முதல் ஒலிம்பிக் தடகள வீரர் வரை அனைவருக்கும் ஏற்ற தொழில்நுட்பங்களை வழங்குவதுதான் எங்கள் நோக்கம்," என தெரிவித்துள்ளார்.
ஃபிட்னஸ் பயிற்சியை மட்டுமல்லாமல், காலண்டர் முறையில் பயிற்சி பதிவுகளை காட்டி ஒழுங்கு மற்றும் தொடர்ச்சியை ஊக்குவிக்கிறது.
அதேவேளை, மெசேஜ்கள், அழைப்புகள், மெயில் மற்றும் ஓன்லைன் பேமெண்ட்கள் போன்ற வசதிகளும் கொண்டிருப்பதால், இது ஒரு முழுமையான டிஜிட்டல் துணையாக விளங்குகிறது.
10 ஆண்டுகள் ஆனாலும், ஆப்பிள் வாட்ச் இன்னும் சிறந்த ஃபிட்னஸ் டிராக்கராக திகழ்கிறது என்பதில் சந்தேகமில்லை.