பிரான்சில் மன ஆரோக்கியமின்மை உள்ளது - உதவிப்ணங்கள் நிறுத்தப்படல் வேண்டும்!!

25 சித்திரை 2025 வெள்ளி 09:47 | பார்வைகள் : 1133
பிரான்சில் எங்களிற்கு ஒரு பிரச்சளை உள்ளது. அதூன் மன ஆரோக்கியப் பிரச்சனை என இவ்ளின் (Yvelines) பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்ல் ஒலிவ் (Karl Olive) தெரிவித்துள்ளார்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நேற்றைய நோந்த் லிசேத் தாக்குதல் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகக் கூறியுள்ளார்.
«நான் ஒரு தந்தையாக கொல்லப்பட்ட மாணவனின் குடும்பத்தின் வலியை நான் உணர்கின்றேன். ஒரு மாணவன் கத்தியைப் பாடசாலைக்கு எடுத்துச் செல்லும் அளவிற்கு மனநிலை மோசமாகி உளளது»
«கத்தி வாங்குவதற்காக பணம், செலவிற்காகப் பிளளைகளிற்கு வழங்கும் பணமாகவே இருந்துள்ளது. 18 வயதிற்குக் குறைந்தவர்களிற்கு ஆயுதங்கள் விற்கத் தடை இருந்தாலும் பல இடங்களில் அவை மீறப்படுகின்றன»
«இப்படியான குற்றங்கள் செய்யும் பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களிற்கு, சமூக உதவிப் பணங்களை நிறுத்தவேண்டும்» எனும் திட்டத்தினை கார்ல் ஒலிவ் பாராளுமன்றத்தில் முன்வழியப் போவதாகத் தெரிவித்துள்ளார்.