சிந்து நதி நீர் நிறுத்தம்; சந்திக்கப் போகும் சவால்கள்!

25 சித்திரை 2025 வெள்ளி 10:58 | பார்வைகள் : 201
சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளில் தண்ணீரை நிறுத்தம் முடிவு பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான முதன்மையான ஒப்பந்தங்களில் ஒன்று சிந்து நதிநீர் ஒப்பந்தம். தீராத பகை கொண்ட இரண்டு நாடுகள் இடையே 60 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருந்த இந்த ஒப்பந்தம், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது.
இதன் மூலம், பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மூன்று நதிகளில் இருந்து தண்ணீரை இந்தியா பயன்படுத்த முடியும்.
சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தத்தால் ஏற்படும் சவால்கள் பின்வருமாறு:
* ஒரே நாளில் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை நிறுத்த முடியாது. கால அவகாசம் தேவைப்படும். அதற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்போது தொடங்கலாம்.
* தற்போதுள்ள வசதிகளின்படி, மேற்கு நோக்கி செல்லும் நதிகளில் 5 முதல் 10 சதவீத தண்ணீரை தான் நிறுத்த முடியும்.
* நீரின் ஓட்டத்தை தடுக்க வேண்டுமெனில் பல அணைகள், கால்வாய்களை அமைத்து இந்திய பகுதிக்குள் தண்ணீரை திருப்ப வேண்டும். இதற்கு சில ஆண்டு ஆகலாம்.
* இதன் வாயிலாக, பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை வழிக்குக் கொண்டு வர முடியும் என பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.