நான்கு பாடசாலை மாணவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்... !!
24 சித்திரை 2025 வியாழன் 17:56 | பார்வைகள் : 11577
Nantes மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நான்கு மாணவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் பதிவாகியுள்ளது.
ஏப்ரல் 24, இன்று வியாழக்கிழமை நண்பகலின் போது இத்தாக்குதல் Notre-Dame-de-Toutes-Aides நகரில் இடம்பெற்றுள்ளது. உயர்கல்வி பயிலும் மாணவன் ஒருவர் சக மாணவர்கள் நால்வரை கத்தியால் குத்தி தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கானவர்களின் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இத்தாக்குதல் தொடர்பில் தனது கண்டனத்தையும், தாக்கப்பட்டவர்களுக்கான தனது ஆதரவையும் வெளியிட்டுள்ளார்.
தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan