போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள் கைது - உள்துறை அமைச்சர் -

24 சித்திரை 2025 வியாழன் 09:41 | பார்வைகள் : 1185
மார்செய் நகர் உட்பட Bouches-du-Rhône மாவட்டத்தில் பாரிய போதைப்பொருள் வலையமைப்பைக் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தெய்யூ தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில், இந்த ஒருங்கிணைந்த சுற்றிவளைப்பு நடந்துள்ளதாகவும், மிகவும் முக்கியமான 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த பெரும் போதைப்பொருள் வலையமைப்பானது, முக்கியமாக மார்செய் நகரின் தெற்குப் பகுதியான 15 மற்றும் 16ம் பிரிவுகளில் பெருமளவில் இயங்கி வந்துள்ளது எனவும், பல நாள் புலனாய்வின் பின்னர் மிக முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலையமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டதால், இந்த வலையமைப்பு முற்றாக நொருங்கிவிடும் என உள்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.