காசாவில் பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்- 23 பேர் உயிரிழப்பு

24 சித்திரை 2025 வியாழன் 08:55 | பார்வைகள் : 2393
காசா மீதான இஸ்ரேலின் புதிய தாக்குதல் தீவிரமடைந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நிலவி வந்த போர் நிறுத்த உடன்பாடு காலாவதியான நிலையில், இஸ்ரேல் ராணுவம் காசா மீது மீண்டும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
பணயக்கைதிகளை மீட்பது மற்றும் ஹமாஸ் ஆயுதக் குழுவின் ராணுவ வலிமையை முழுமையாக அழித்தொழிப்பது ஆகிய முக்கிய இலக்குகளை முன்வைத்து இஸ்ரேல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக நீடித்து வரும் இந்த காசா போரில் இதுவரை 50,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) காசாவின் தெற்கே அமைந்துள்ள ரஃபா நகரை குறிவைத்து அதிதீவிர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்த கொடூரமான தாக்குதலில், அப்பகுதியில் அமைந்திருந்த இஸ்லாமிய பள்ளிக்கூடம் ஒன்று உட்பட ஏராளமான கட்டிடங்கள் தீக்கிரையாகி இடிந்து தரைமட்டமாகின.
இந்த ரஃபா தாக்குதலில் குறைந்தது 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த புதிய இராணுவ நடவடிக்கை, ஏற்கனவே துயரத்தில் ஆழ்ந்துள்ள காசா மக்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025