Paristamil Navigation Paristamil advert login

"யுக்ரேனில் போர்நிறுத்தம்” - மிக மிக மிக தொலைவில் இருக்கிறது பிரான்ஸ்!

24 சித்திரை 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 859


“யுக்ரேனில் போர்நிறுத்தத்தைக் கொடுவருவதில் பிரான்ஸ் மிக மிக மிக தொலைவில் இருக்கிறது!” அரச ஊடகப் பேச்சாளர் Sophie Primas தெரிவித்துள்ளார்.

தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு இன்று வியாழக்கிழமை காலை பேட்டியளித்த அவர், "உக்ரேனியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு போர் நிறுத்தம் மற்றும் அமைதிக்கான நிலைமைகளிலிருந்து நாங்கள் மிகவும் வெகு தொலைவில் இருக்கிறோம்," என தெரிவித்தார்.

”டொனால்ட் ட்ரம்ப் மற்றும் விளாடிமிர் புட்டினிடம் இருந்து பல அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் யுக்ரேனினால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.” எனவும் அவர் தெரிவித்தார்.

30 நாட்கள் போர்நிறுத்தத்துக்கு செலன்ஸ்கி தயாராக இருப்பதாக தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். என்றபோதும் பிரான்சின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்