Aulnay: காவல் துறையினருக்கும் குடிமக்களுக்கும் இடையே மோதல்!

24 சித்திரை 2025 வியாழன் 04:37 | பார்வைகள் : 1484
Aulnay-sous-Bois நகரில் செவ்வாய்க்கிழமை காவல் துறையினருக்கும் குடிமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில், ஒரு காவல்துறை அதிகாரியும், குடிமகன் ஒருவரும் காயமடைந்தனர்.
மதியம் 3:30 மணிக்கு காவல்துறை அதிகாரி ஒருவரை ஒரு வன்முறை குழுவினர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் குண்டுகளால் மோதலை கட்டுப்படுத்தினர்.
மாலை 7:30 மணியளவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது ஒரு நபர் மின்சார துப்பாக்கியால் தாக்கப்பட்டு மயக்க நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் செய்யப்பட்டது. பெரும் அளவிலான காவல் துறையினரும், 150 பாதுகாப்பு படையினரும் (CRS) அங்கு அனுப்பப்பட்டனர். மோதலுக்குப் பிறகு காவல்துறை தலைமையகம் பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.
இது போன்ற மோதல்கள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அந்த பகுதி தற்போது மிகுந்த பதற்ற நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.