இதுவரை பதவிவகித்த 266 பாப்பரசர்கள்.. பிரான்ஸ் இரண்டாவது இடத்தில்...!!
23 சித்திரை 2025 புதன் 17:42 | பார்வைகள் : 4680
பாப்பரசர் பிரான்சிஸ் மறைவை அடுத்து புதிய பாப்பரசருக்காக தேர்வு இடம்பெற உள்ளது. அது தொடர்பில் பல்வேறு வதந்திகள் உலாவி வருகின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை பாப்பரசர்களாக பணியாற்றிவர்கள் தொடர்பில் பல தகவல்களை தொகுக்கிறது இப்பதிவு.
இதுவரை உலகம் முழுவதிலும் இருந்து 266 பாப்பரசர்கள் பதவிவகித்துள்ளனர்.
மறைந்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் அவர்கள் லத்தீன் அமெரிக்காவில் இருந்து ஒரே ஒரு பாப்பரசர் இவராகும்.
அர்ஜண்டினா, போலந்து, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து ஒரு பாப்பரசர் மட்டுமே சேவையாற்றியுள்ளனர்.
குரோசியா, ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் துருக்கி ஆகிய நான்கு நடுகளில் இருந்து தலா இவ்விரண்டு பாப்பரசர்கள் சேவையாற்றியுள்ளனர்.
பாலஸ்தீன் மற்றும் துனிஷியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்தும் தலா மூன்று பாப்பரசர்கள் கடமையாற்றியுள்ளனர்.
ஜேர்மனி 6,
சிரியா 5,
கிரீஸ் 4
என இந்த பாப்பரசர்களின் பட்டியல் நீள்கிறது.
இதில் பிரான்ஸ் மொத்தமாக 16 பாப்பரசர்களைக் கொண்டுள்ளது.
இந்த பட்டியலில் கிட்டவும் நெருங்கமுடியாத இடத்தில் இத்தாலி இருக்கிறது. மொத்தமாக பதவிவகித்த 266 பாப்பரசர்களில் 217 பேர் இத்தாலிய குடியுரிமை கொண்டவர்களாவர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan