RN கட்சியிடமிருந்து 3.5 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு கோரும் ஐரோப்பிய பாராளுமன்றம்!

22 சித்திரை 2025 செவ்வாய் 18:52 | பார்வைகள் : 1357
மரீன் லு பென்னின் RN கட்சியினரிடம் இருந்து ஐரோப்பிய பாராளுமன்றம் 3.5 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு கோரியுள்ளது.
கடந்த மார்ச் 31 ஆம் திகதி முதல் RN கட்சியைச் சேர்ந்த 20 பேர் பண மோசடி காரணமாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறனர். இந்நிலையில்., ஐரோப்பிய பாராளுமன்றம் இழப்பீட்டு தொகையாக 3.5 மில்லியன் யூரோக்களை கோரியுள்ளது.
இந்த தொகையானது நிதி மோசடியில் ஈடுபட்டமைக்காக அறிவிக்கப்பட்ட தொகை இல்லை எனவும், மாறாக ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு சேதம் ஏற்படுத்தியமைக்கான ‘இழப்பீடு’ தொகை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக 4.5 மில்லியன் யூரோக்கள் மக்கள் பணம் மோசடி செய்யப்பட்டதாகவும், நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற போதே 1 மில்லியன் யூரோக்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டபூர்வ நடவடிக்கைக்காக 80,000 யூரோக்களும், இழப்பீடாக 200,000 யூரோக்களும், பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியமைக்காக 3.25 மில்லியன் யூரோக்கள் என மொத்தமாக 3.5 மில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய பாராளுமன்றம் கோரியுள்ளது.