கனடா பொதுத்தேர்தல்: வெற்றி பெறப்போவது யார்?

22 சித்திரை 2025 செவ்வாய் 16:05 | பார்வைகள் : 370
கனடாவில் அடுத்த திங்கட்கிழமை, அதாவது, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போவது யார் என கேள்வி எழுந்துள்ளது.
நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றில், கனடாவின் தற்போதைய பிரதமரான, மார்க் கார்னி சார்ந்த லிபரல் கட்சிக்கு மக்களிடையே 43.7 சதவிகித ஆதரவு உள்ளது தெரியவந்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 36.3 சதவிகிதமும், ஜக்மீத் சிங்கின் நியூ டெமாக்ரட்ஸ் கட்சிக்கு 10.7 சதவிகித ஆதரவும் உள்ளது.
தேர்தலிலும் எதிரொலிக்குமானால், மார்க் கார்னியின் லிபரல் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.