விராட் கோஹ்லியின் இமாலய சாதனையை முறியடித்த குஜராத் கேப்டன்
22 சித்திரை 2025 செவ்வாய் 11:01 | பார்வைகள் : 1910
ஐபிஎல் தொடரில் 25 வயதிற்குள் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற விராட் கோஹ்லியின் சாதனையை சுப்மன் கில் முறியடித்தார்.
ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைவர் சுப்மன் கில் (Shubman Gill) 55 பந்துகளில் 3 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் விளாசினார்.
மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றார். இது அவரது 12வது டி20 போட்டி ஆட்டநாயகன் விருது ஆகும்.
இதன்மூலம் 25 வயதில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் எனும் கோஹ்லியின் சாதனையை முறியடித்தார்.
விராட் கோஹ்லி தனது 25 வயதில், 157 டி20 போட்டிகளில் விளையாடி 11 முறை ஆட்டநாயகன் விருதை வென்று இருந்தார்.
ஆனால், சுப்மன் கில் (Shubman Gill) 153 போட்டிகளிலேயே 12 முறை ஆட்டநாயகன் விருதை பெற்று மிரட்டியுள்ளார்.
இவர்களுக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா (10), ரோஹித் ஷர்மா (9), அபிஷேக் ஷர்மா (9) ஆகியோர் உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan