Paristamil Navigation Paristamil advert login

ஜேர்மனியில் வெடித்த போராட்டம்

ஜேர்மனியில் வெடித்த போராட்டம்

22 சித்திரை 2025 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 3532


ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், நேட்டோ அமைப்புக்கு எதிராகவும், மக்கள் திரண்டு பேரணி நடத்திய சம்பவங்கள் ஜேர்மனியில் நிகழ்ந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமையன்று, ஜேர்மன் நகரமான மியூனிக்கில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு ரஷ்யாவுக்கு ஆதரவாகவும், நேட்டோ அமைப்புக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஜேர்மனி உதவுவதற்கு எதிராகவும் பேரணி நடத்தினார்கள்.

போர் வேண்டாம், அமைதி வேண்டும், புடின் எங்கள் நண்பர், உக்ரைனுக்கு உதவாதே என்னும் பதாகைகள் பலர் கைகளில் இருந்ததைக் காணமுடிகிறது.

பேரணியில் கலந்துகொண்ட மக்கள் சிலர், புடின் எப்போதுமே ஜேர்மனிக்கு ஆதரவாகத்தான் இருந்துள்ளார். அவர் அமைதி வேண்டும் என்பதற்காக நேட்டோ அமைப்பில் இணைய விரும்பினார், ஆனால், நேட்டோ அதை நிராகரித்துவிட்டது என்று கூறியுள்ளார்கள்.

ஜேர்மனி உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு பதிலாக, தூதரக பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மியூனிக்கில் மட்டுமின்றி பல ஜேர்மன் நகரங்களில் இத்தகைய பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது, உக்ரைனுக்கு ஜேர்மனி ஆயுத உதவி செய்வதில் ஜேர்மன் மக்கள் பலருக்கு விருப்பமில்லை என்பதையே காட்டுவதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்