Bobignyயில் கதிரை மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு ருமேனியக் கும்பல் களவு ! நால்வர் கைது!

21 சித்திரை 2025 திங்கள் 21:13 | பார்வைகள் : 1311
மார்ச் 13 அன்று Bobigny(Seine-Saint-Denis) இல் Philippe என்ற 54 வயது மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மனிதரை, அவரது வீட்டு பொருட்களை களவெடுக்க ஒரு ருமேனியக் கும்பல் கொடூரமாக தாக்கியது.
பிலிப் அவரது வீட்டு படிக்கட்டின் அடியில், பல காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இச்சம்பவத்தில் அவர் பல எலும்பு முறிவுகள், தலையில் காயம், நினைவாற்றல் இழப்பு மற்றும் உடலுறுப்பின் செயல்பாடுகளில் பெரும் பாதிப்புக்கும் உள்ளாகினார்.
வீடியோ காட்சிகள் மற்றும் தொலைபேசி தரவுகள் மூலம் காவல் துறையினர் நால்வரை அடையாளம் கண்டுபிடித்து, ஏப்ரல் 3 அன்று கைது செய்தனர்.
தாக்குதலுக்கு முன்னதாகவே அவர்கள் வீட்டை ஆய்வு செய்திருந்தனர். பிலிப் கடுமையாக எதிர்த்ததால், கும்பல் அவரை கதிரை மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி விட்டுச் சென்றனர்.
விசாரணையின் போது, குற்றவாளிகள் திருடிய பொருட்கள் தங்களுக்கு "புதையலாக" இருந்தன என்று ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் குழுவாக செயல்பட்ட திருட்டு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.