அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ்- பிரதமர் மோடி சந்திப்பு
22 சித்திரை 2025 செவ்வாய் 05:39 | பார்வைகள் : 4158
டில்லியில் பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்
அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக வந்தனர். துணை அதிபர் வான்ஸை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். டில்லியில் வான்ஸ் குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் வான்ஸ், அவரது மனைவி உஷா, குழந்தைகள், டில்லி அக்சார்தம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்துக்கு ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவர்களை பிரதமர் வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் ஜே.டி.வான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். வர்த்தகம், வரிவிதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
டில்லி, ஜெய்ப்பூர், ஆக்ரா உள்ளிட்ட நகரங்களுக்கும் வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan