Paristamil Navigation Paristamil advert login

‘ரெட்ரோ’ படத்திற்கு சிக்கல்?

‘ரெட்ரோ’ படத்திற்கு  சிக்கல்?

21 சித்திரை 2025 திங்கள் 14:31 | பார்வைகள் : 2558


தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கார்த்திக் சுப்பராஜ். அதைத்தொடர்ந்து இவர் வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது இவரது இயக்கத்தில் ரெட்ரோ எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படம் நடிகர் சூர்யாவின் 44 வது படமாகும். காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். 

மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் இலங்கை தமிழர்களுக்கு எதிரான சித்தரிப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ், ஜகமே தந்திரம் திரைப்படத்திலும் இலங்கை தமிழர்கள் ரௌடிசம் செய்வது போல் காட்டி இருந்தார். அதனால் ரெட்ரோ படத்திலும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். அப்படி இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ரெட்ரோ படத்திற்கு சிக்கல் வர வாய்ப்புள்ளதாகவும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

5 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்