”வாழ்நாள் முழுக்க அநீதிக்கு எதிராக போராடியவர்” - போப்பாண்டவர் குறித்து மக்ரோன்!!!
21 சித்திரை 2025 திங்கள் 10:21 | பார்வைகள் : 3659
தற்போது Mayotte தீவில் இருக்கும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், போப்பாண்டவரின் மரணச் செய்தியின் பின்னர் அங்கிருந்து தனது இரங்கல் செய்தியினை பதிவிட்டுள்ளார்.

“வாழ்நாள் முழுவதும் அநீதிக்கு எதிராக போராடியவர் போப்பாண்டவர் பிரான்சுவா” என அவர் குறிப்பிட்டார். மேஎலும், “முதலில் உலகெங்கிலும் உள்ள அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் எனது மிகவும் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும் - அவருடைய சிறப்பு இடத்தைப் பற்றியும் அவர்களிடம் சொல்லவும் விரும்புகிறேன். அவரது பதவிக்காலம் முழுவதும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மிகவும் பலவீனமானவர்கள், மிகுந்த மனத்தாழ்மையுடன் இருப்பவர்களுடன் மிகவும் சிறப்பு உணர்வுடன் அவர் இருந்துள்ளார். இதில் அவர் தனக்கு பிடித்த ஒரு பாரம்பரியத்துக்கு உண்மையாக இருந்தார். அவர் வாழ்நாள் முழுக்க அநீதிக்கு எதிராக போராடியவர்” என மக்ரோன் குறிப்பிட்டார்.
நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்பு விழாவுக்காக போப்பாண்டவர் அழைக்கப்பட்ட போது, அவர் வருகை தர மறுத்திருந்தார். டிசம்பர் 15 ஆம் திகதி அவர் பிரெஞ்சுத்தீவான Corse இற்கு பயணித்திருந்தார். அவரை வரவேற்க்க ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Corse தீவுக்கு பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan