Mayotte தீவை சென்றடைந்தார் ஜனாதிபதி மக்ரோன்! - மக்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்!!

21 சித்திரை 2025 திங்கள் 07:28 | பார்வைகள் : 916
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஏப்ரல் 21, திங்கட்கிழமை காலை Mayotte தீவினை சென்றடைந்தார். நான்கு மாதங்களுக்கு முன்னர் பெரும் சூறாவளியில் சிக்கியிருந்த Mayotte தீவு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆகிய இருவரும் தனி விமானத்தில் Mayotte தீவினை இன்று காலை சென்றடைந்தனர். இருவரையும் அத்தீவின் அதிகாரிகள் வரவேற்றனர். அவர்களை நலம் விசாரித்த ஜனாதிபதி மக்ரோன், பின்னர் நடை பயணமாக சென்று மக்களை வீடு வீடாகச் சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த டிசம்பர் 5 ஆம் திகதி அன்று Chido எனும் சூறாவளி மொத்த தீவினையும் சூறையாடிவிட்டுச் சென்றிருந்தது. இந்திய பெருங்கடலில் உள்ள இந்த தீவு கிட்டத்தட்ட கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்தது. 40 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் Mayotte தீவினை மீண்டும் கட்டியெழுப்புவேன் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்தார்.