10 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்! ஒருவர் கைது!

21 சித்திரை 2025 திங்கள் 06:31 | பார்வைகள் : 817
Roissy-Fret (Val-d'Oise) பகுதியில் சுங்கத் துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனையில் 250 கிலோ கிராம் கோக்கெயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 10 மில்லியன் யூரோக்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதம் 9ம் திகதி Dakar நகரில் இருந்து வந்த மரப்பெட்டிகளில் இரட்டை அடுக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள், நெதர்லாந்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது.
இதனை பறிமுதல் செய்யாமல், சுங்கத் துறையினர் சர்வதேச அளவில் கண்காணிப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்தனர். மேலும் நெதர்லாந்தில் உள்ள சுங்க அதிகாரிகளுடன் இணைந்து, பரிஸ் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் கீழ் நடைபெற்றது.
இந்த நடவடிக்கையின் மூலம் மறுநாளே சந்தேகத்திற்கு இடமான ஒருவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர், போலியான அடையாள அட்டையுடன் வந்திருந்தார் என்றும், அவர் ஏற்கனவே வன்முறை மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதையடுத்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது.