பிரான்சுவா பெய்ரூ - பிரான்சின் மிக வயதான பிரதமர்!

21 சித்திரை 2025 திங்கள் 08:00 | பார்வைகள் : 2820
இன்று ஏப்ரல் 21 ஆம் திகதியுடன் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ - 73 வருடங்கள், 10 மாதங்கள் 27 நாட்கள் வயதை பூர்த்தி செய்கிறார். அத்துடன் ஐந்தாம் குடியரசின் அதிக வயதுடைய பிரதமராகவும் மாறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் - ஐந்தாம் குடியரசின் குறுகியகால பிரதமர் சாதனையை முறியடித்திருந்தார். முன்னதாக மிஷல் பார்னியே பிரதமராக 3 மாதங்கள் சேவையாற்றியிருந்தார். தொடர்ச்சியான நம்பிக்கை இல்லா பிரேரணைகள் மூலம் அவர் பதவி விலக்கப்பட்டிருந்தார். அதை அடுத்து பிரதமராக பதவியேற்ற பிரான்சுவா பெய்ரூவின் நிலையும் கேள்விக்குறியாக இருந்த நிலையில், தற்போது அவர் ஐந்து மாதங்களை கடந்தும் பிரதமராக செயற்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐந்தாம் குடியரசின் மிக வயதாக பிரதமராக இன்று திங்கட்கிழமையுடன் அவர் மாற்றம் பெறுகிறார்.
முன்னதாக அதிக வயதுடைய பிரதமராக மிஷல் பார்னியே இருந்தார். அவர் டிசம்பர் 5 ஆம் திகதி பதவி விலகியிருந்தார். அதன்போது அவருக்கு வயது 73 ஆண்டுகள், 10 மாதங்கள் 26 நாட்கள் ஆகும்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025