போர் நிறுத்தத்திற்கு பிறகு முதல் இஸ்ரேலிய வீரர் பலி!

20 சித்திரை 2025 ஞாயிறு 18:28 | பார்வைகள் : 462
காசாவில் நடந்த போர் நடவடிக்கையின் போது இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் இஸ்ரேலிய வீரர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹமாஸுடனான போர் நிறுத்த உடன்பாடு கடந்த மார்ச் மாத மத்தியில் முறிந்த பிறகு பதிவான முதல் உயிரிழப்பு இதுவென்று இஸ்ரேலிய ராணுவம் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த வீரர் 35 வயதான சார்ஜென்ட் மேஜர் கலேப் ஸ்லிமான் அல்-நசஸ்ரா என தெரியவந்துள்ளது.
ராணுவத்தின் அறிக்கையின்படி, காசாவின் வடக்கு பகுதியில் நடந்த சண்டையின் போது அவர் கொல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் மேலும் 3 வீரர்கள் காயமடைந்ததாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.