Paristamil Navigation Paristamil advert login

இரண்டு முறை பிறந்த குழந்தை., அற்புதம் நிகழ்த்திய பிரித்தானிய மருத்துவக் குழு

இரண்டு முறை பிறந்த குழந்தை., அற்புதம் நிகழ்த்திய பிரித்தானிய மருத்துவக் குழு

20 சித்திரை 2025 ஞாயிறு 18:23 | பார்வைகள் : 222


பிரித்தானியாவில் ஒரே குழந்தை இரண்டு முறை பிறந்த ஆச்சரியமான மருத்துவ நிகழ்வு நிடைந்துள்ளது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டைச் சேர்ந்த லூசி ஐசக் (Lucy Isaac) ஆசிரியைக்குத் தான் இப்படியொரு மருத்துவ அற்புதம் நிகழ்ந்துள்ளது.

32 வயதான லூசி, 12 வார கர்ப்பமாக இருக்கும் போதே ஒரு சாதாரண அல்ட்ராசவுண்டு சோதனையில் அவருக்கு கருப்பை புற்றுநோய் (ovarian cancer) இருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக சிகிச்சை பெறவில்லை என்றால் புற்றுநோய் பரவ வாய்ப்பு இருந்ததால், 20 வார கர்ப்பத்தில் ஒரு அபாயகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது, லூசியின் கருப்பை, அதில் இருந்த அவரது குழந்தையான ராஃபர்டியுடன் (Rafferty Isaac ) வெளியில் எடுத்து வைத்து, புற்றுநோய் கட்டியை அகற்றினர்.

5 மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையில், 15 பேரை கொண்ட மருத்துவ குழு செயல்பட்டது.

ராஃபர்டியின் பாதுகாப்பிற்காக, கருப்பையை saline pack-ல் மெதுவாக சுற்றி, 20 நிமிடங்களுக்கு ஒரு முறை அதைப் மாற்றியும் பாதுகாத்தனர்.  

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, கருப்பை மீண்டும் உள்ளே பத்திரமாக வைக்கப்பட்டது.

ஜனவரி மாத இறுதியில், ராஃபர்டி 6lb 5oz எடையுடன் பிறந்தார். இந்த பிள்ளையின் பிறப்பு குடும்பத்திற்கு ஒரு உணர்வுபூர்வ சாதனையாக அமைந்தது.

அறிகுறி இல்லாத நிலையில் தனக்கு இருந்த நோயை கண்டுபிடித்து, சிகிச்சை அளித்த மருத்துவ குழுவிற்கு லூசி நன்றி தெரிவித்தார். தான் அதிவிசேஷமாக பாக்கியம் கொண்டவளாக உணர்வதாக கூறியுள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்