சமந்தா 2வது திருமணத்துக்கு தயாரா?

20 சித்திரை 2025 ஞாயிறு 14:35 | பார்வைகள் : 464
நடிகையாக கலக்கிய சமந்தா தற்போது தயாரிப்பாளராகவும் அறிமுகமாகி உள்ளார். அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான த்ரிலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரிக்கும் முதல் படம் 'சுபம்'. இந்தப் படம் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் சமந்தாவும் அதன் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார். நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பின்னர் தனிமையில் இருக்கும் சமந்தா, அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
சமந்தாவும் ராஜ் நிதிமோருவும் காதலிப்பதாகச் சில காலமாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. சில சமயங்களில் இருவரும் ஒன்றாகவும் காணப்பட்டுள்ளனர். ராஜ் நிதிமோருவைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் இயக்குநர்களில் ராஜும் ஒருவர். 'தி ஃபேமிலி மேன் 2' இல் சமந்தா வில்லியாக நடித்தார். இந்த வெப் தொடரின் மூலம் சமந்தாவுக்குப் பான் இந்தியா நாயகியாக அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து, 'ஹனி பன்னி' வெப் தொடரிலும் நடித்தார்.
முதலில் நல்ல நண்பர்களாக இருந்த சமந்தாவும் ராஜும் சில காலத்திற்கு முன்பு காதலிக்கத் தொடங்கினர் என்று செய்திகள் வெளியாகின்றன. இப்போது இருவரும் திருமணத்திற்குத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வதந்திகளுக்கு வலு சேர்க்கும் விதமாக, சமந்தாவும் ராஜும் சனிக்கிழமை திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரரை தரிசித்தனர். அதன் பிறகு சமந்தாவும் ராஜும் சிறப்பு பூஜைகள் செய்ததாகத் தெரிகிறது. அதேபோல், ஸ்ரீகாளஹஸ்திக்கும் சென்று அங்கும் சிறப்பு பூஜைகள் செய்தார்களாம். இதெல்லாம் தங்கள் திருமணத்திற்காகத்தான் அவர்கள் செய்ததாக கூறப்படுகிறது.
மே மாதத்தில் சமந்தாவும் ராஜ் நிதிமோருவும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் செய்திகள் வெளியாகின்றன. இருப்பினும், சமந்தாவோ ராஜோ தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. சமந்தாவும் ராஜும் திருமலை சென்றபோது எடுத்த போட்டோஸ் சமூக ஊடகங்களில் viral ஆகி வருகின்றன.
நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பின்னர் சமந்தா பல பிரச்சினைகளைச் சந்தித்தார். மயோசிடிஸ் காரணமாக பல நாட்கள் உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்தார். மறுபுறம், நாக சைதன்யாவுடன் பிரிந்ததால் சமூக ஊடகங்களில் trolling செய்யப்பட்டார். இப்போது சமந்தா அனைத்தையும் மறந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கத் தயாராகி வருவதாகச் செய்திகள் வெளியாகின்றன.