Paristamil Navigation Paristamil advert login

தலை கீழாக ஓடும் உலகின் முதல் கார் - எப்படி இயங்கும்?

தலை கீழாக ஓடும் உலகின் முதல் கார் - எப்படி இயங்கும்?

20 சித்திரை 2025 ஞாயிறு 13:09 | பார்வைகள் : 412


தலை கீழாக ஓடும் உலகின் முதல் காரை மெக்மர்ட்ரி ஸ்பீர்லிங் தயாரித்துள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த கார் தயாரிக்கும் நிறுவனமான மெக்மர்ட்ரி ஸ்பீர்லிங் (McMurtry Speirling), தலைகீழாக ஓடும் காரை தயாரித்துள்ளது.

இந்த நிறுவனம் தயாரித்துள்ள ஹைபர் மின்சார கார், ஏற்கனேவே பல்வேறு சாதனைகளை தன் வசம் வைத்துள்ள நிலையில், தற்போது உலகின் முதல் தலை கீழாக ஓடும் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதற்காக Gloucestershire பகுதியில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில், பிரேத்யேகமாக உருவாக்கப்பட்ட இடத்தில், சுயாதீன நடுவர்கள் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது.

அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான தாமஸ் யேட்ஸ், ஒற்றை இருக்கை கொண்ட இந்த மின்சார காரை, ஒரு சாய்வுப்பாதையில் சுழலும் ரிக் மீது ஓட்டினார்.
 
அந்த தளம் தலைகீழாக திருப்பப்பட்டு போதும், தாமஸ் யேட்ஸ் அந்த காரை சிறிது தூரம் முன்னோக்கி நகர்த்தினார்.

டவுன்ஃபோர்ஸ் ஆன் டிமாண்ட் விசிறி எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

காரின் கீழே ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, அதன் மூலம் வாகனத்தின் சொந்த எடையான 1,000 கிலோவை விட 2 மடங்கு டவுன்ஃபோர்ஸை உருவாக்குகிறது.

இந்த தொழில்நுட்பம் கார் தலைகீழாக செல்லும் போதும், அதன் இயக்கத்தைப் பொருட்படுத்தாமல் தீவிர பிடியை பராமரிக்க அனுமதிக்கிறது. இதற்காக இந்த காரில் 2 சக்திவாய்ந்த விசிறிகள் பயன்படுத்தப்படுகிறது.

100 KW பேட்டரியைக் கொண்டுள்ள இந்த கார், 20 நிமிட அதிவேக பந்தயத்திற்கு போதுமான சார்ஜை வழங்குகிறது.

இந்த தொழில்நுட்பத்தில் 100 கார்களை உருவாக்க திட்டமிட்டுள்ள இந்த நிறுவனம், 2026 ஆம் ஆண்டு கார் சந்தைக்கு வரும் என அறிவித்துள்ளது.    

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்