Essonne : Bouygues தொலைத்தொடர்பு காட்சியறை கொள்ளை!!
.jpg)
20 சித்திரை 2025 ஞாயிறு 09:59 | பார்வைகள் : 603
தொலைபேசிகள், மடிக்கணணிகள் விற்பனை செய்யும் Bouygues நிறுவனத்துக்குச் சொந்தமான காட்சியறை ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
Athis-Mons (Essonne) நகரில் உள்ள குறித்த காட்சியறைக்கு நேற்று ஏப்ரல் 19 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணி அளவில் வருகை தந்த கொள்ளையர்கள் சிலர் அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்திவிட்டு காட்சியறையை கொள்ளையிட்டனர். அவர்கள் கைகளில் ஆயுதங்களும், கண்ணீர்புகை குண்டுகளும் வைத்திருந்தனர்.
கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு கண்டறியப்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. மேற்படி சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.