பாரிஸ் நகரில் துப்பாக்கி சூடு: ஒருவர் காயம்!!

20 சித்திரை 2025 ஞாயிறு 06:58 | பார்வைகள் : 2888
பரிஸ் 10ல் உள்ள Faubourg Saint-Martin பகுதியில் ஏப்ரல் மாதம் 19 ம் திகதி சனிக்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த ஒருவரை தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் விரைந்து மீட்டனர். சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டு பொதுமக்களை காவல்துறையினர் தடை செய்தனர்.
இந்த சம்பவம் ஒரு நிலத்தடி கார் நிறுத்தும் மையத்தில் ஏற்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர் இடையே கடிகார விற்பனை தொடர்பான தகராறின் போது, இருவர் துப்பாக்கியுடன் தாக்கியதாக தெரிகிறது. விற்பனையாளரின் மேல் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், தாக்கிய இருவரும் வாடிக்கையாளருடன் இணைந்து தப்பிச் சென்றுள்ளனர். இது ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
காயமடைந்த நபர், தனது வாகனத்தில் இருந்து இறங்கி, அருகில் இருந்த தீயணைப்பு வீரர்களிடம் தன்னைத் துப்பாக்கியால் தாக்கியதாகக் கூறியுள்ளார். அவரது கை மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு உள்ளது. குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதால், காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025