மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்

19 சித்திரை 2025 சனி 15:13 | பார்வைகள் : 514
நடிகர் அஜித் தற்போது பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதாக வெளிவந்திருக்கும் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித், ஒரு பக்கம் சினிமாவில் பேசியதாக நடித்துக் கொண்டிருந்த போது, ஏற்கனவே இரண்டு சர்வதேச கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டார் என்பதும், தற்போது அவர் பெல்ஜியம் நாட்டில் நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார் என்பதும் தெரிந்தது.
பெல்ஜியம் கார் ரேஸ் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், சற்று முன் அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதாகவும், ஆனால் அஜித்துக்கு எந்த பெரிய காயமும் இல்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், "அஜித்துக்கு எந்த காயமும் இல்லை" என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் மற்றும் பிப்ரவரி மாதம் ஆகிய இரண்டு மாதங்களிலும் அவர் இரண்டு விபத்துக்களை அஜித் எதிர்கொண்டார் என்பதும், தற்போது மீண்டும் ஒரு விபத்தை எதிர்கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.