இம்மானுவேல் மக்ரோன் இந்திய பெருங்கடலில் ஐந்து நாள் பயணம்?

19 சித்திரை 2025 சனி 12:38 | பார்வைகள் : 3112
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு ஐந்து நாள் பயணமாக மயோத் (Mayotte) லா ரீயூனியன் (La Réunion), மடகாஸ்கர் (Madagascar) மற்றும் மொரீஷியஸ் (Maurice) தீவுகளுக்கு திங்களன்று செல்கிறார்.
மயோத்தில் புயலால் சேதமடைந்த இடங்களில் மீள்கட்டமைப்புகான திட்டங்களை அறிவிப்பும் லா ரீயூனியனில் சிகுங்குன்யா தொற்று நிலை, ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் பேசவுள்ளார்.
மடகாஸ்காரில், காலனித்துவ காலத்தில் கொண்டு செல்லப்பட்ட மனித எலும்புக்கூறுகள் குறிப்பாக 1897ல் பிரான்சு படைகள் வெட்டிய ராணி டொயராவின் (Toera) தலையை – மீள வழங்கும் திட்டம் குறித்தும், பிரான்சின் தெற்குப் பிரதேசங்களாக இருக்கும் îles Eparses தீவுகளை மடகாஸ்கர் உரிமை கோரும் சர்ச்சை குறித்தும் விவாதிக்கவுள்ளார்.
மொரீஷியஸ் தீவுக்கான கோதுமை வழங்கும் ஒப்பந்தத்தை கையெழுத்திடவும் மற்றும் பிளாஸ்டிக் மாசுக்களை எதிர்க்கும் திட்டமான Plastic Odyssey கப்பலை பார்வையிடவும் உள்ளார். இந்த பயணம், இந்தியப் பெருங்கடலில் பிரான்சின் தாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1