சர்வதேச ஆராய்ச்சியாளர்களே வாருங்கள் - எமானுவல் மக்ரோன்!!

18 சித்திரை 2025 வெள்ளி 22:04 | பார்வைகள் : 1478
சர்வதேச ஆராய்ச்சியளர்களை பிரான்சையும் ஐரோப்பாவினையும் தெரிவு செய்யுமாறு எமானுவல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் கொள்கைளால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ஆராய்ச்சியாளர்களைக் கவரும் நோக்கில் இந்த முன்னெடுப்பை ஜனாதிபதி செய்துள்ளார்.
இவர்கள் அனைவரையும் மே 5ம் திகதி ஒருங்கிணைய அழைப்பு விடுத்துள்ளார்.
«எனது செய்தி தெளிவாக உள்ளது. பிரான்சில் ஆராய்ச்சிகளிற்கு முன்னுரிமை, கண்டுபிடிப்புகள் எமது கலாசாரம், அறிவியல் என்பது எல்லைகள் அற்ற பரந்த உலகம். ஆராய்ச்சியாளர் கணவான்களே! சீமாட்டிகளே! எதிர்வரும் 5ம் திகதி இந்த மாபெரும் ஆராய்ச்சியாளர்கள் சமூகத்தில் இணைந்து கொள்ளுங்கள்»
எனும் அழைப்பை எமானுவல் மக்ரோன் விடுத்துள்ளார்.