மரின் லூப்பன் - மாவட்ட ஆலோசகர் பதவியும் பறிப்பு -

18 சித்திரை 2025 வெள்ளி 22:02 | பார்வைகள் : 4404
மரின் லூப்பனிற்கு ஐந்து வருடம் அரசியல் தகுதியிழப்புத் தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மரின் லூப்பன், மாவட்ட ஆலாசகர் (conseillère départementale) பதவி வகிக்கும் பா-து-கலே மாவட்த்திற்கு இந்தத் தீர்ப்பின் நகல் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் இவரின் மாவட்ட அலோசகர் பதிவியும் நீக்கப்பட்டுள்ளது என பா-து-கலே நிர்வாகத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மரின் லூப்பனின் மேன் முறையீடு வேன்டுமென்றே 2026 மற்றும் 2027 இற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேன் முறையீட்டில் இவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்தாலும் தேர்தலில் பங்குகொள்ள முடியாது.
இதற்காகவே இவரது மேன்முறையீடு, அரசியல் தலையீட்டாலேயே பெரிதும் தள்ளிப் போயுள்ளது என மரின் லூப்பன் குற்றம் சாட்டி உள்ளார்.