Paristamil Navigation Paristamil advert login

"Gare du Nord" ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: TGV மற்றும் TER சேவைகள் பாதிப்பு!!

18 சித்திரை 2025 வெள்ளி 20:03 | பார்வைகள் : 1009


Gare du Nord ரயில் நிலையத்தில் இன்று மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறினால், பல ரயில்கள் தாமதம் அடைந்துள்ளன. மின்சார தடையினால் ஏற்பட்ட சிக்கலால் இன்று 18 ஏப்ரல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ரயில் இயக்கம் 20 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டதாகவும், தற்போது எல்லா ரயில்களும் மீண்டும் இயக்கத்தில் உள்ளதாகவும் SNCF நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கோளாறு காரணமாக, Hauts-de-France பகுதிக்குச் செல்லும் TER ரயில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சில ரயில்களுக்கு 2 மணி 20 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, Compiègne, Amiens, Maubeuge மற்றும் Saint-Quentin நோக்கிச் செல்லும் ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுகிறது. மேலும், Lille மற்றும் Dunkerque நோக்கிச் செல்லும் சில TGV ரயில்களும் தாமதம் அடைந்துள்ளன.

அதே நேரத்தில், இன்று இரவு Stade de France மைதானத்தில் நடைபெறும் Burna Boy இசை நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு RER B ரயில் சேவை வழக்கம்போல இயங்கும் எனவும் அந்த வழித்தட பயணிகள் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக பயணிக்கலாம் என்று SNCF நிறுவனம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்