Essonne : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!

18 சித்திரை 2025 வெள்ளி 18:34 | பார்வைகள் : 772
நேற்று ஏப்ரல் 17 வியாழக்கிழமை Wissous (Essonne) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பரிசின் தெற்கு புறநகரில் உள்ள குறித்த நகரில் உள்ள துப்பாக்கி சுடும் கழகம் ஒன்றில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 10 மணி அளவில் நபர் ஒருவர் சுடப்பட்டுள்ளார். இது தவறுதலாக இடம்பெற்ற ஒன்றாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
31 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.