Paristamil Navigation Paristamil advert login

ரென்னில் துப்பாக்கிச் சூடும் கைதுகளும்!!

ரென்னில் துப்பாக்கிச் சூடும் கைதுகளும்!!

18 சித்திரை 2025 வெள்ளி 15:27 | பார்வைகள் : 1023


நேற்று ரென்னில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் குற்றவாளிகள் நால்வர் கைது செய்யகப்பட்டு;ள்ளனர்.

17ம் திகதி 17h30 அளவில் முகமுடி அணிந்த மூவர் ஒரு வானகனத்தில் இருந்து இறங்கி வில்ஜோன் (Villejean) பகுதியை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளனர்.

ஒருவர் AK 47 இனால் சரமாரியாகச் சுட மற்றவர்கள் கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் நால்வர் படுகாயமடைய, மற்றவர்கள் வாகனங்களிற்குள் பதுங்கி இருந்தும், வாகனங்களை எடுத்துத் தப்பியும் சென்றுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டைச் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கருகில் இவர்கள் தப்பியோடிய சிற்றுந்து எரிக்கப்பட்டிருந்தது. அதனருகில் வைத்து 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே பல குற்றங்களைச் செய்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகம் செய்த மூவரும் ஒரு கட்டத்தினுள் வைத்து சுயுஐனு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 20,22 மற்றும் 23 வயதுடையவர்கள்.

மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்