சூர்யாவின் 'ரெட்ரோ' டிரைலர்

18 சித்திரை 2025 வெள்ளி 14:08 | பார்வைகள் : 357
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நிமிடம் 42 வினாடிகள் கொண்ட இந்த ட்ரெய்லர் வீடியோவில், சூர்யாவின் மாஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, வில்லன் 'பத்து நிமிஷத்துல மான் கறி பிரியாணி ரெடி. அதுக்குள்ள ஒரு ஷோ ஓட்டுறியா?' என கேட்க, சூர்யா 'ஷோ ஓட்டிவிடுவோமா?' என பதிலளிக்கும் பக்கா மாஸ் காட்சிகள் டிரைலரில் உள்ளன.
அதேபோல், 'உண்மையான போர் வரவேண்டும் என்றுதான் காத்திருக்கிறேன். போய் சீக்கிரம் வரச் சொல்லு அந்த ஒருத்தன' என்று வில்லன் கூற, சூர்யா ஆவேசமாக பதிலளிக்கின்ற காட்சிகளும் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன.
காதலிக்காக அடிதடி சண்டையை விட்டுவிட்டு அமைதியாக வாழ முயற்சிக்கும் சூர்யாவை, வில்லன்கள் தொடர்ந்து சிக்கலில் ஆழ்த்தும் நிலையில் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என ட்ரெய்லரில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
பொதுவாக மாஸ் ஹீரோ படங்களில் ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. ஆனால், பூஜா ஹெக்டேவுக்கு இந்த படத்தில் கனமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பது அவரது காட்சிகளிலிருந்து தெளிவாக தெரிகிறது.
சந்தோஷ் நாராயணனின் அசத்தலான பின்னணி இசை, கார்த்திக் சுப்புராஜின் ட்விஸ்ட் வைக்கும்' இயக்கம் ஆகியவை இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்கிறன. குறிப்பாக, 'பேட்ட' படத்தில் இடம் பெற்ற "சிறப்பான தரமான சம்பவத்தை இனிமேல் தான்டா பார்க்க போறீங்க" என்ற வசனத்தை, இந்த படத்திலும் சரியான இடத்தில் அவர் வைத்திருப்பது, அவரது புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.
மொத்தத்தில், சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி, ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை தந்திருக்கிறது என்பதை இந்த ட்ரெய்லர் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.