Paristamil Navigation Paristamil advert login

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் KPY பாலா.

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் KPY பாலா.

18 சித்திரை 2025 வெள்ளி 14:05 | பார்வைகள் : 366


விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் தனிமுத்திரை பதித்த KPY பாலா, தற்போது கதாநாயகனாக திரையுலகில் கால் வைக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடமிருந்து வாழ்த்து மழை பெய்து கொண்டிருக்கிறது.

கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, அதன் பிறகு ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட பல பார்வையாளர்களின் விருப்பமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அவரது நகைச்சுவை மற்றும் நேர்த்தியான நடிப்பு, ரசிகர்களை கட்டிப்போட்டது குறிப்பிடத்தக்கது.

பாலா ஒரு காமெடி ஆர்டிஸ்ட் மட்டுமல்ல அல்ல; சமூகப்பணிகளிலும் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக ஏழை எளியோருக்கு உதவிக்கரம் நீட்டியதன் மூலம், அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் மதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், KPY பாலா கதாநாயகனாக நடிக்கும் படம் ஷெரீஃப் இயக்கத்தில் உருவாக உள்ளது. இசையை, ‘மரண மாஸ்’ பாணியில், விவேக் மெர்வின் அமைக்கிறார். இதில் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைகிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.

“நான் தயாரிக்க நினைத்த படத்தில் பாலாவை ஹீரோவாக அறிமுகம் செய்யலாம் என எண்ணிய சமயத்தில், அவருக்கேற்ப ஒரு சிறந்த கதை கொண்ட தயாரிப்பாளர் ஒத்துழைக்க வந்தார்,” என பாலா படத்தை தயாரிப்பதில் மிஸ் ஆன ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.

இந்தப் படம், பாலாவின் திரை பயணத்திற்கான முதல் படியாக, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்