Paristamil Navigation Paristamil advert login

Bondy : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!!

Bondy : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்!!

17 சித்திரை 2025 வியாழன் 17:19 | பார்வைகள் : 660


Bondy (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஏப்ரல் 16, நேற்று புதன்கிழமை இரவு 11 மணி அளவில் Bondy நகரின் Guillaume-Apollinaire வீதியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக அவரசரப்பிரிவுக்கு கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். சம்பவ இடத்தில் எவரும் இருக்கவில்லை. மாறாக அங்கு கிட்டத்தட்ட 20 வரையான  9 மி.மீ கலிபர் துப்பாக்கி ரவைகள் சிதறிக்கிடந்துள்ளதை பார்த்துள்ளனர்.

அதேவேளை, சில நிமிடங்களில் முழங்காலில் துப்பாக்கிச்சூட்டுக் காயத்துடன் நபர் ஒருவர் Jean-Verdier மருத்துவமனைக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் விசாரணைகளில் மேற்குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறித்த நபர் காயமடைந்திருந்தார் என தெரியவந்துள்ளது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்