Paristamil Navigation Paristamil advert login

சிம்புவின் அடுத்த படத்தில் இணையும் சந்தானம்..

சிம்புவின் அடுத்த படத்தில் இணையும் சந்தானம்..

17 சித்திரை 2025 வியாழன் 12:48 | பார்வைகள் : 501


கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் நிலையில், சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாகவும், அதற்காக அவருக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிம்புவின் பிறந்தநாள் அன்று, அவரது மூன்று படங்கள் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், அதில் ஒன்றுதான் சிம்புவின் 49வது படத்தை ’பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் காயடு லோஹர் மற்றும் மமிதா பாஜூ நாயகிகளாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ரூபாய் 7 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சம்பளம் குறித்த இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்திற்கு சாய் அபிநயங்கர் இசையமைக்க இருப்பதாக சமீபத்தில் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் பாடல்கள் கம்போஸ் செய்யும் பணியும் தொடங்கப்பட்டு விட்டதாகவும் அவர் உறுதி செய்திருந்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்