இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்

18 சித்திரை 2025 வெள்ளி 08:42 | பார்வைகள் : 228
உலக பொருளாதார மன்றத்தின் 2025ம் ஆண்டுக்கான உலகளாவிய இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு இடம் பெற்றுள்ளார்.
உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) 2025ம் ஆண்டுக்கான இளம் உலகளாவிய தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த 40 வயதுகுட்பட்ட 116 நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இந்தியர்கள் 7 பேர் இடம் பெற்றுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
1. அனுராக் மாலூ, மலையேறுபவர், தொழில்முனைவர் மற்றும் பேச்சாளர்.
2. நிபுன் மல்ஹோத்ரா- தொழில்முனைவோர் மற்றும் ஊனமுற்றோர் உரிமை ஆர்வலர் ஆவார்.
3. ரித்தேஷ் அகர்வால்- தொழில்முனைவோர், OYO ஹோட்டல்ஸ் நிறுவனர்.
4. அலோக் மெடிகேபுரா அனில்- நெக்ஸ்ட் பிக் இன்னோவேஷன் லேப்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்.
5. ராம் மோகன் நாயுடு, அரசியல்வாதி, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்
6. நடராஜன் சங்கர்- பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் பங்குதாரர்.
7. மானசி சுப்பிரமணியம் - தலைமை ஆசிரியர் மற்றும் பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர்.
இந்த பட்டியில் இடம் பிடித்துள்ள, மிகவும் பிரபலமானவர் தான் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு.
யார் இந்த ராம் மோகன் நாயுடு?
* ஆந்திராவில் டிசம்பர் 18ம் தேதி 1987ம் ஆண்டு ராம் மோகன் நாயுடு பிறந்தார். இவருக்கு வயது 37.
* இவர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி.
* இவர் லோக்சபா தேர்தலில், ஸ்ரீகாகுளம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார்.
* இவர் விமான போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார்.
* இவர் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ளார்.
இது குறித்து ராம்மோகன் நாயடு கூறியதாவது: உலகப் பொருளாதார மன்றத்தால் இளம் உலகளாவிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு மரியாதைக்குரிய விஷயமாகும்.
இந்த அங்கீகாரம் எனக்கு மட்டுமல்ல. மாற்றத்தை ஏற்படுத்த கனவு காணும் ஒவ்வொரு இளம் இந்தியருக்கும் அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.